சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா முதல்வர் ஸ்டாலின் அவர்களே? என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப் பணியாளர்களாகப் பணியமர்த்தி காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவை வழங்கப்படும்” என்று உறுதியளித்துவிட்டு, ஆளுங்கட்சியானதும் வாக்குறுதியை வீசியெறிந்துவிட்டு அவர்களுக்கு ஏமாற்றத்தை மட்டும் பரிசளிப்பது தான் பொற்கால ஆட்சியா? என வினவியுள்ளார்.
வீண் செலவுகளுக்கும் வெற்று விளம்பரங்களுக்கும் பணத்தை வாரி இறைக்கும் அறிவாலய
அரசுக்கு, மழலைகளின் ஊட்டச்சத்தை உறுதிசெய்யும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதற்கு மட்டும் கசக்கிறதா? எனறும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு ஓய்வூதியமும் பணிக்கொடையும் வழங்காததோடு, அரசின் கஜானாவை மட்டும் காலி செய்துகொண்டு ஒட்டுமொத்த தமிழகத்தையே நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கும் திமுக அரசை வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் துரத்தியடிக்கப் போவது நிச்சயம் என்றும் அவர் கூறியுள்ளார்.