ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை எதிர்த்தே, இந்தியாவுக்கு அதிக வரி விதித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது மனைவியுடன் இங்கிலாந்து சென்ற நிலையில், அந்நாட்டு அதிபருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து பேசிய ட்ரம்ப், இந்தியாவுடன் தனக்கு நல்ல நட்பு இருப்பதாக தெரிவித்தார். இந்திய பிரதமருடன் தான் நெருக்கமாக பழகி வருவதாக கூறிய அவர், பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு தான் வாழ்த்து கூறியதாக குறிப்பிட்டார்.
இந்தியாவும், சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை எதிர்த்தே வரி விதித்ததாக விளக்கம் அளித்த ட்ரம்ப், எண்ணெய் விலை குறைந்தால் வேறு வழியின்றி போரில் இருந்து புதின் பின்வாங்குவார் எனவும் கூறினார்.