நாட்டிற்காகத் தங்கப் பதக்கம் வென்றது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இந்திய குத்துச்சண்டை வீரர் மீனாக்ஷி ஹூடா தெரிவித்துள்ளார்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மினாக்ஷி ஹூடா, லிவர்பூலில் நடந்த உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 48 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
இந்நிலையில் டெல்லி வந்திறங்கிய அவர், உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்ல வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருந்ததாகவும், தனது தந்தையையும், நாட்டையும் பெருமைப்படுத்தியதில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.