சேலத்தில் அரசுப் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற போதை நபரை, பேருந்தில் இருந்து கழிவு கால்வாய் பகுதியில் நடத்துநர் தள்ளிவிட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் இருந்து பழைய பேருந்து நிலையத்துக்கு வந்த நகரப் பேருந்து ஒன்றில் ஏறிய மதுபோதையில் இருந்த நபர், நடத்துநரிடம் தகராறு செய்துள்ளார்.
பணிமனைக்குச் சென்ற அப்பேருந்தின் படிக்கட்டில் தொங்கியப்படி சென்ற மதுபோதை நபரை இறங்க கூறியும், அதற்குச் செவி சாய்க்காததால் அந்த நபரை கழிவநீர் கால்வாய் பகுதியில் நடத்துநர் தள்ளிவிட்டார்.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.