‘வீரத்துறவி’ இராமகோபாலன் பிறந்தநாள் : தலைவர்கள் புகழாரம்!
Sep 12, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

‘வீரத்துறவி’ இராமகோபாலன் பிறந்தநாள் : தலைவர்கள் புகழாரம்!

Murugesan M by Murugesan M
Sep 19, 2025, 02:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

‘வீரத்துறவி’ இராமகோபாலன் பிறந்தநாளை முன்னிட்டு, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,  மத்திய அமைச்சர் எல். முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை  ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழ்நாட்டில் மதமாற்றங்களுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி அதில் வெற்றி பெற்று, இந்து மதத்தின் காவலராக திகழ்ந்த கவிஞர், பாடகர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகம் கொண்ட, இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி அமரர் திரு. ராமகோபாலன் ஜி அவர்களின் பிறந்தநாள் இன்று! பல ஆண்டுகள் ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை ஓடவைத்த பெருமைக்குரியவர்.

தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு கொலைமுயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்தவர். பெண்களே சக்தியின் வடிவம் எனக் கருதியதுடன், திருவிளக்கு பூஜையின் வழியாக ஹிந்து பெண்களை ஒருங்கிணைத்தவர். இன்றைய தினத்தில், வீரத்துறவி அமரர்  ராமகோபாலன் ஜி அவர்களின் புகழைப் போற்றி வணங்குவோம்! என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய அமைச்சர் எல். முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

இந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவரும், இந்து சமுதாய மக்களுக்காக ஓயாது குரல் கொடுத்தவருமான ‘வீரத்துறவி’ இராமகோபாலன் அய்யா அவர்களின் பிறந்த தினம் இன்று.

தனது தொடக்க காலங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீவிர சேவகராக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், தமிழகத்தில் இந்து முன்னணி அமைப்பை நிறுவியதன் மூலம், இந்து சமுதாய மக்களை ஒருங்கிணைக்கும் ஒப்பற்ற பணிகளை இடையறாது மேற்கொண்டார்.

1982-ஆம் ஆண்டில், இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடுமையாக குரல் கொடுத்த அய்யா இராமகோபாலன் அவர்கள், கோவில்களையும் கோவில் சொத்துக்களையும் பாதுகாப்பதை தனது பெரும் கடமையெனக் கருதி செய்து வந்தார்.

தமிழகம் முழுவதும் இன்றளவும் மிகுந்த வரவேற்போடு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடைபெறுவதற்கு வித்திட்டவர் அய்யா அவர்கள். சித்தாந்த வேறுபாடுகளின்றி, தமிழகத்தின் அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்பட்ட ‘வீரத்துறவி’ இராமகோபாலன் அய்யா அவர்களின் பிறந்த தினத்தில், அவர் சமுதாயத்திற்கு ஆற்றிய பங்களிப்புகளை நினைவு கூர்வோம்..! என்று எல். முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து  பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தேசப்பணிக்கும், தெய்வப்பணிக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த, இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் அமரர் திரு. ராமகோபாலன் அவர்களது பிறந்த தினம் இன்று.

இந்து ஒற்றுமை மாநாடுகளை நடத்தி இந்து மக்களுக்கு இடையிலான சாதிய நிலைகளைக் களையச் செய்தவர். இந்து மக்களின் நலனுக்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்த மாமனிதர்.

விவேகானந்தர் வழிநடந்த வீரத்துறவி ஐயா திரு. ராமகோபாலன் அவர்களின் புகழைப் போற்றி வணங்குகிறோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: Nainar Nagendran'Veerathuravi' Ramagopalan's birthday today: L. MuruganAnnamalai wish him well‘வீரத்துறவி’ இராமகோபாலன்
Share
Tweet
SendShare
Previous Post

சேலம் : படிக்கட்டில் தொங்கியபடி சென்ற போதை நபரை பேருந்தில் இருந்து தள்ளிவிட்ட நடத்துநர்!

Next Post

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய தொழில்நுட்ப வல்லுநர்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies