அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்திய தொழில்நுட்ப வல்லுநரை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தெலங்கானாவை சேர்ந்த முகமது நிசாமுதீன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 3-ம் தேதி முகமது நிசாமுதீனுக்கும் அவருக்கு நண்பருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது நிசாமுதீன் தனது நண்பரை கத்தியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்துச் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், நிசாமுதீனை என்கவுண்டர் செய்தனர்.
காயமடைந்த அவரது நண்பர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், இனவெறி பாகுபாடு காரணமாகத் தங்களது மகன் கொலைச் செய்யப்பட்டுள்ளதாக நிசாமுதீனின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.