சென்னை கிண்டியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட உள்ள நிலையில், பூங்கா அமைக்க ஆலோசனை வழங்கும் தனியார் நிறுவனத்திற்குக் கட்டணமாக ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கிண்டியில் உள்ள சுமார் 118 ஏக்கர் நிலத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
தற்போது நீரைத் தேக்கி குளங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், பூங்கா அமைக்க ஆலோசனை வழங்கும் தனியார் நிறுவனத்தை தேர்வுசெய்யும் பணி, ஜூன் மாதம் தொடங்கியது.
இந்த நிலையில், 4 நிறுவனங்கள் ஆலோசனை வழங்குவதற்கான தகுதியை பெற்றுள்ளன. அதில் தேர்வாகும் ஒரு நிறுவனத்திற்குக் கட்டணமாக ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எந்த இடத்தில் எந்தச் செடியை நட வேண்டும் என்பது பற்றித் தேர்வாகும் நிறுவனம் ஆலோசனை வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.