தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசி பகுதியில் பட்டாசுகள் தயாரிக்கும் பணி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.
வரும் அக்டோபர் 20-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை ஒட்டி சிறுவர்கள் விரும்பும் பென்சில் வெடி, கம்பி மத்தாப்பூ, தரைச் சக்கரம், பாம்பு மாத்திரை, சாட்டை உள்ளிட்ட பட்டாசு வகைகளும், பெரியவர்கள் விரும்பும் அணுகுண்டு, ராக்கெட், சரவெடி, விண்ணில் ஒளிசிந்தும் பேன்சி ரகப் பட்டாசுகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
பட்டாசு ஆலைகளில் சுமார் 250 முதல் 300 ரகப் பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறது. விண்ணில் ஒளிசிந்தும் பேன்சி ரகப் பட்டாசு, சரவெடி பட்டாசுகளே அதிகமாகத் தயாரிக்கப்படுகிறது.
இந்த இருவகைகளும் தீபாவளி மட்டுமல்லாது, திருமண விழா, கோயில் திருவிழா போன்றவற்றுக்கும் பயன்டுத்தப்பட்டு வருகிறது. எனவே இதற்கு எப்போதும் வரவேற்பு உண்டு.