நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கொலையாளி சுர்ஜித் போலி பதிவெண்ணுடன் வாகனத்தை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளி சுர்ஜித், அவரது தந்தையான காவல் உதவி ஆய்வாளர் சரவணன், உறவினர் ஜெயபால் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
இதில் சுர்ஜித், சரவணன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரித்தில் பல்வேறு தகவல்கள் கிடைத்ததாக நீதிமன்றத்தில் 19 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாகத் தனது மகனுக்குப் போலி பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தை உதவி ஆய்வாளர் வாங்கிக் கொடுத்து பயன்படுத்தப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலைக்குப் பிறகு மகனின் ரத்தக்கறைப் படிந்த ஆடைகளைத் தீயிட்டு கொளுத்துவதற்காக உறவினரின் குவாரிக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கையில் உதவி ஆய்வாளர் சரவணன் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டால் சாட்சியங்களை சிதைக்க வாய்ப்புள்ளதால் விசாரணைப் பாதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
















