ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரிஸ் மாடல் போன்கள் இந்தியாவில் இன்று அறிமுகமாகியுள்ளது.
அதாவது ஐபோன் 17, 17 ப்ரோ, 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் 17 ஏர் மாடல் போன்கள் ஆப்பிள் ஸ்டோர்களில் விற்பனைக்கு வந்துள்ளன.
120 ஹெர்ட்ஸ் ஓ எல்.இ.டி டிஸ்பிளேக்கள், சிறந்த திரைப் பாதுகாப்பு, பெரிய பேட்டரிகள், A19 வகை சிப்செட்கள், மேம்படுத்தப்பட்ட 18MP செல்ஃபி கேமரா மற்றும் பின்புறத்தில் மூன்று 48MP லென்ஸ்கள் எனப் புதிய அம்சங்கள் ஐபோன் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் 256 ஜிபி சேமிப்பு கொண்ட ஐபோன் 17 மாடலின் விலை 82 ஆயிரத்து 900ஆகவும், 512 ஜிபி வகையின் விலை 1 லட்சத்து இரண்டாயிரத்து 900ஆகவும் உள்ளது.
ஐபோன் ஏர் 256 ஜிபியின் விலை 1 லட்சத்து 19 ஆயிரத்து 900ல் தொடங்கி ஒன் டிபி சேமிப்பு வரை விருப்பத்திற்கேற்ப ஒரு லட்சத்து அறுபதாயிரம் வரைச் செல்கிறது.
மேலும் ப்ரோ மாடல் ஒரு லட்சத்து 35 ஆயிரம் முதல் ஆரம்பமாகிறது மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல் இரண்டு லட்சத்து முப்பதாயிரம் வரை விற்பனையாகிறது.
















