காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களிப்பதில்லை என்பதால் ராகுல்காந்தி இந்தியாவின் ஜனநாயகத்தை திட்டமிட்டு பலவீனப்படுத்த முயற்சிப் பதாகப் பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாகப் பீகார் மாநிலம், பாட்னாவில் பேட்டியளித்த அவர், வாக்காளர் வரைவு பட்டியல் விவகாரத்தில் ராகுல்காந்தி பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும், உண்மையைத் திரிபுபடுத்திப் பேசுவது ராகுல்காந்திக்கு இயல்பாகிவிட்டது எனவும் கடுமையாக விமர்சித்தார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்கான கண்ணியத்தை ராகுல்காந்தி சீர்குலைத்துவிட்டதாகவும் ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.