நாட்டிற்கு எதிராகச் செயல்படும் ராகுல்காந்தி, நாட்டை விட்டு தப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனப் பாஜக எம்பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹிமாச்சல பிரதேச மாநிலம், குலுவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நேபாளத்தின் ஜென் ஜீ குறித்து ராகுல்காந்தி வெளியிட்ட பதிவை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது ராகுல்காந்தி எப்போதும் நாட்டை அவமானப்படுத்தும் அறிக்கைகளை வெளியிடுவதாகவும், நேபாள மாதிரியை இங்கு செயல்படுத்த வேண்டும் என்று மறைமுகமாக ஜென் ஜீயை ராகுல்காந்தி அழைப்பதாகவும் கங்கனா ரனாவத் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், ராகுல்காந்தியை போன்ற வம்சத்தினர் நேபாளத்தில் தூக்கி எறியப்பட்டு, ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும், ராகுல்காந்தி இதையே தொடர்ந்து செய்தால், நாட்டை விட்டு அவர் தப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார்.