தமிழகத்தில் 42 அரசியல் கட்சிகளின் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளை மீறியதாக 474 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பதிவுகளை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
அதில் தமிழகத்தில் மட்டும் 42 அரசியல் கட்சிகளின் பதிவு பறிபோகியுள்ளது. தொடர்ந்து 6 ஆண்டுகளாக போட்டியிடாதது உள்ளிட்ட விதிமீறலால் இந்த கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2 மாதங்களில் மட்டும் நாடு முழுவதும் 808 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக 359 கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையின் மூலம், பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 46 ஆக குறைந்துள்ளது.