சோசியல் மீடியா இன்புளுயன்சர்களுக்குப் பணத்தை கொடுத்து முப்பெரும் விழாவை பெருமையாக பேச வைத்திருக்கும் திமுகவின் செயல்பாடு அம்பலமாகியுள்ளது. பணத்தோடு திமுகக் கொடுத்த ஒரே கண்டண்டையே அனைவரும் பேசி வீடியோ வெளியிட்டதால் இன்புளுயன்சர்களும் சிக்கிக்கொண்டு முழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
என்னடா… எல்லாரும் திமுக முப்பெரும் விழாவை பத்தியே பேசுறாங்களேனு நினைக்கிறாங்களா? காசு கொடுத்துப் பேச சொன்னா பேசி தானே ஆகணும்.
நாம் வீடியோவில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அனைவருமே சோசியல் மீடியா இன்புளுயன்சர்ஸ். மில்லியன் அளவில் பாலோவர்ஸ் வைத்திருக்கும் இவர்களை நகைக்கடைகள், துணிக்கடைகள், பெரிய, பெரிய நிறுவனங்கள் தங்களின் விளம்பரத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டு அவர்களுக்குக் குறிப்பிட்ட தொகையை வழங்குகிறார்கள்.
சோசியல் மீடியா இன்புளுயன்சர்களில் பெரும்பாலானோரின் வருமானமும், வாழ்வாதாரமும் விளம்பரத்தை நம்பியே இருக்கிறது. அப்படி இருப்பவர்களுக்கும் திமுகவின் முப்பெரும் விழாவிற்கும் என்ன சம்பந்தம் இருக்கு என்று தானே கேட்கத் தோன்றுகிறது. இவர்களுக்கும் திமுக முப்பெரும் விழாவுக்கும் இருக்கும் ஒரே சம்பந்தம் பணம் மட்டுமே.
திமுகவின் முப்பெரும் விழா அண்மையில் கரூரில் நடைபெற்றது. திமுகவின் கரூர் மாவட்ட செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தான் முப்பெரும் விழாவிற்கான அத்துணை ஏற்பாடுகளையும் செய்திருந்தார். விழாவிற்குத் தொண்டர்களின் வருகை எதிர்பார்த்த அளவிற்கு வராத நிலையில், மழையும் குறுக்கிட்டு முப்பெரும் விழாவை நாசமாக்கியது.
முப்பெரும் விழாவிற்கு அழைப்பு விடுக்கும் போதே புடவை மற்றும் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், முதலமைச்சரின் வருகையின் போது பெரும்பாலான இருக்கைகள் காலியானதாகவே காட்சியளித்தது. இரண்டு லட்சம் தொண்டர்கள் வருவார்கள் எனக் கூறப்பட்ட நிலையில் கூடியிருந்த சில ஆயிரம் தொண்டர்களும் முதலமைச்சர் பேசுவதற்கு முன்பாகவே கலைந்து சென்ற காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இதுவரை இல்லாத அளவிற்கு முப்பெரும் விழா நடைபெற்றிருப்பதாக முதலமைச்சர் மேடையில் பெருமையாகப் பேசினாலும், தொண்டர்களின் வருகை மிகக்குறைவாக இருந்ததால் கட்சி நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனவே முதலமைச்சரின் மனதைக் குளிரவைக்கும் வகையில், ஏற்கனவே ஊடகங்கள், நாளிதழ்கள், இணையதளங்கள் எனப் பல கோடி ரூபாய் அளவிற்குத் தொகையை செலவழித்த செந்தில்பாலாஜி அடுத்தகட்டமாக இன்புளுயன்சர்ஸ்களுக்கும் கணிசமாகத் தொகையை கொடுத்து முப்பெரும் விழா பற்றி பெருமையாகப் பேசி வீடியோ வெளியிட சொன்னது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இன்புளுயன்சர்களை பொறுத்தவரையில் கொடுத்த தொகைக்கு உண்டான வேலையை பார்ப்பார்கள் என்பதை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தியுள்ளது. குறிப்பிட்ட தொகைய கொடுத்துக் கரூரில் ஒரு தரமான சம்பவம் அரங்கேறியிருக்கிறது என்பதைப் போல வீடியோ வெளியிட வேண்டும் எனச் செந்தில்பாலாஜி தரப்பு உத்தரவிட, இன்புளுயன்சர்கள் அனைவரும் ஒரே கண்டண்டை பேசி சிக்கிக்கொண்டனர்.
பிரபல இன்புளுயன்சர்களாகக் கருதப்படும் இவர்கள் அனைவரும் திமுக முப்பெரும் விழா நடைபெற்று முடிந்த மறுநாள் ஒரே கண்டண்டை அடுத்தடுத்து பதிவு செய்வதைக் கண்டுபிடித்த சமூக வலைதளவாசிகள் அவற்றை ஒன்றாக இணைத்துச் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுத் திமுகவின் புதுவகை விளம்பர யுக்தியை அம்பலப்படுத்தியுள்ளனர்.
மாநாடு நடத்துவதற்காகப் பல கோடி செலவு செய்தும் பலனளிக்காத நிலையில், இன்புளுயன்சர்களை வைத்து நடத்திய விளம்பர நாடகமும் தோல்வியில் முடிவடைந்திருக்கிறது. திமுகவின் விழாவை பணம் வாங்கிவிட்டு பெருமையாகப் பேசி இன்புளுயன்சர்களின் எதிர்காலமும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.