பீகாரை கலக்கும் காளான் லேடி : 70 ஆயிரம் பெண்களின் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்றிய தேவதை!
Oct 17, 2026, 05:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பீகாரை கலக்கும் காளான் லேடி : 70 ஆயிரம் பெண்களின் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்றிய தேவதை!

Murugesan M by Murugesan M
Sep 20, 2025, 08:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பீகாரில் வேளாண் துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்த வரும் பெண் ஒருவர், அம்மாநில மக்களால் காளான் லேடி எனப் பிரியமாக அழைக்கப்படுகிறார். மத்திய, மாநில அரசுகளும், அவரது பணியைப் பாராட்டி பல்வேறு விருதுகளை வழங்கிக் கவுரவித்துள்ளன. அப்படி அவர் என்ன செய்தார். இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

பீகாரின் முங்கர் என்ற மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்தவர் பினா தேவி. ஒரு காலத்தில் அடுத்த வேலை உணவிற்கே வழியில்லாமல் தவித்து வந்த அவர், தனது குழந்தைகளை வளர்க்கவும் சிரமப்பட்டு வந்தார். குடும்பத்தின் பொருளாதாரச் சூழல், அவரது குழந்தைகள் தரமான கல்வி கற்பதற்கும் தடையாக இருந்தது.

குடும்பத்தைக் காக்க ஏதாவது வேலைச் செய்யலாம் என முடிவெடுத்த பினா தேவிக்கு, காளான் வளர்ப்பில் ஈடுபட்டால் என்ன என்ற கேள்வி எழுந்தது. ஆனால், காளான் விதைகளை வாங்க கூட பணமில்லை. எப்படியோ சிறிய தொகையைப் புரட்டினார். அதனைக் கொண்டு ஒரு கிலோ காளான் விதைகளை மட்டுமே வாங்க முடிந்தது.

காளான் வளர்ப்பில் ஈடுபட்டவுடன்தான் தெரிந்தது, அதற்கு ஏற்ற ஈரப்பதம், வெப்பநிலை உள்ளிட்டவைத் தேவை என்பது. இருந்தபோதும் சோர்வடையாமல், அருகில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற பினா தேவி, காளான் வளர்ப்பு குறித்து முறையாக அறிந்துகொண்டார்.

சில ஆண்டுகளில் காளான் வளப்பு பெரிய லாபத்தைக் கொடுத்தது. குடும்ப வறுமை நீங்கியது. அவரது குழந்தைகளுக்கு மிகச் சிறந்த கல்வி கிடைக்கத் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து அவர்ச் செய்த செயல்தான் அவரை, பீகாரின் காளான் லேடியாக உயர்த்தியது.

தனது கிராமத்தில் பெரும்பாலான பெண்கள் வறுமையில் வாடி வருவதைக் கவனித்த அவர், அவர்களுக்கும் காளான் வளர்ப்பு குறித்து கற்றுகொடுக்க முன்வந்தார். பின்னர் அருகில் உள்ள மற்ற கிராம பெண்களுக்கும் காளான் வளர்ப்பை அவர்  கற்பித்தார். அவரது இந்த முயற்சியால், இன்றைய தேதிக்குப் பீகாரில் சுமார் 100 கிராமங்களை  சேர்ந்த பெண்களின் முக்கிய வருவாய் ஆதாரமாகக் காளான் வளர்ப்பு மாறியுள்ளது.

சுயதொழிலால் தானும் முன்னேறி, மற்ற பெண்களையும் முன்னேற்றிய பினா தேவிக்கு, பீகார் அரசு சிறந்த பெண் விவசாயிக்கான விருது வழங்கிக் கவுரவப்படுத்தியது. 2020ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று அப்போதைய குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த், பினா தேவியை நேரில் அழைத்துப் பாராட்டிய நிலையில், பிரதமர் மோடியும் தனது மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பினா தேவியை நாடறிய செய்தார். தற்போது காளான் வளர்ப்பைத் தாண்டி, இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வையும் அவர் ஏற்படுத்தி வருகிறார்.

“நான் இதுவரைச் சுமார் 70 ஆயிரம் பெண்களுக்குக் காளான் வளர்ப்பு குறித்து கற்பித்துள்ளேன். நான் சுயதொழில் தொடங்கியபோது எனது செயலை  பலர் பைத்தியக்காரத்தனமானது எனக் கேலி செய்தனர். ஆனால், நான் விடாப்பிடியாக இருந்தேன். தற்போது எனது வாழ்க்கையையும் மேம்படுத்தி, சகப் பெண்களின் வாழ்க்கையையும் உயர்த்தியுள்ளேன்.” எனத் தெரிவிக்கிறார் பீகாரின் காளான் லேடியான பினா தேவி.

Tags: The Mushroom Lady who stirred up Bihar: The angel who lit the lives of 70 thousands women!பீகாரை கலக்கும் காளான் லேடிதேவதைவேளாண் துறைகாளான் லேடி
Share
Tweet
SendShare
Previous Post

கரூர்ல ஒரு தரமான சம்பவம் : காசுக்கு பேசச்சொன்ன திமுக – ஒரே கன்டண்டை பேசி சிக்கிக் கொண்ட இன்புளுயன்சர்ஸ்!

Next Post

சலுகையை ரத்து செய்த அமெரிக்கா – இந்தியாவுக்கு மேலும் நெருக்கடி கொடுக்க திட்டம்..?

Related News

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies