மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விரக்தியில் தவறான தகவலைப் பரப்பிக் கொண்டிருக்கிறார் எனப் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துக் கோவையில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
வளர்ச்சி அடைந்த பாரதம் எனும் குறிக்கோளுக்கான முக்கிய நடவடிக்கை ஜிஎஸ்டி சீர்திருத்தம் என்றும் உற்பத்தி துறை அதிகமாக உள்ள மாநிலங்கள் பலன் பெறும் விதமாக ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் கமிஷனிடம் எந்தப் புகாரும் அளிக்காமல் வாக்கு திருட்டு என ராகுல்காந்தி குற்றம் சாட்டி வருகிறார் என்றும் தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்த பின்னரும் மீண்டும், மீண்டும் ராகுல் பேசுவது அவரது விரக்தியை காட்டுகிறது என்று அவர் கூறினார்.
விரக்தியில் தேர்தல் கமிஷன், வாக்காளர்கள் பற்றிய தவறான தகவலை ராகுல் பரப்புவதற்குக் அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
திராவிட மாடல் என்பது ரவுடிகளுக்கு ஆதரவு கொடுக்கும் ஆட்சி என்று வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார்.