ராஜஸ்தானில் உள்ள பிரபல ஹோட்டலின் கழிவறையில் இருந்து 5 அடி நீளமுள்ள ராஜநாகம் பிடிபட்டது.
ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தின் புஷ்கர் பகுதியில் பிரபல நட்சத்திர விடுதி உள்ளது. இந்த ஹோட்டலின் 2-வது மாடியில் உள்ள அறையின் கழிவறையில் கொடூர விஷமுள்ள 5 அடி நீளமுள்ள ராஜநாகம் western toilet-ல் புகுந்துள்ளது.
அப்போது கழிவறைக்குச் சென்ற சுற்றுலா பயணி, பாம்பு இருந்ததை கண்டு அலறியடித்துக் கழிவறையில் இருந்து வெளியேறினார்.
தகவலறிந்து வந்த வனத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி western toilet-ல் இருந்த ராஜநாகத்தை மீட்டு அடர்ந்த காட்டுப்பகுதியில் விட்டனர். இதனையடுத்து ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.