ஒரு மோதலை விரைவில் எப்படி முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்பதை இந்தியாவிடம் உலக நாடுகள் கற்க வேண்டும் என விமானப்படை தளபதி ஏ பி சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விமானப்படை தளபதி ஏ பி சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஆப்ரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களில் பெரும்பாலானவை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.
எந்த மோதலுக்கும் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார். இதனால், நாம் அடுத்த கட்டத்திற்குத் தயாராவது தடைபடுவதுடன், பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியை பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.
இதனை உலக நாடுகள் மறந்துவிட்டதாலே பல நாடுகளில் போர் நீடிப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் நமது நோக்கம் பயங்கரவாதத்துக்கு எதிரானது என்பதாலே, விரைவில் போரை நிறுத்திவிட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும் ஒரு மோதலை விரைவில் எப்படி முடிக்க வேண்டும் என இந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும் என்றும் ஏபி சிங் தெரிவித்தார்.