இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராம கோபாலன் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்குக் காடேஸ்வர சுப்ரமணியம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழகம் முழுவதும் இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராம கோபாலனின் 98 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் திருப்பூர், சந்திராபுரம் பிரிவில் வைக்கப்பட்ட ராம கோபாலன் உருவ படத்திற்கு இந்து முன்னணி மாநில தலைவர்க் காடேஸ்வரா சுப்பிரமணியம் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து இந்து முன்னணி மாநில செயலாளர்ச் சி.பி.சண்முகம், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கிருஷ்ணன் மறறும் மாவட்ட செயலாளர்ப் பிரதீப் உள்ளிட்டோரும் மரியாதைச் செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு, காடேஸ்வரா சுப்பிரமணியம் மரக்கன்றுகள் வழங்கினார். பின்னர் பிறந்தநாளையொட்டி மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.