வேலூர் மாவட்டம், பூட்டுத்தாக்கு அருகே அரசு பேருந்தின் சக்கரத்தில் கரும்புகையுடன் தீ எரிந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் திருத்தணி புறப்பட்ட அரசு பேருந்து பூட்டுத்தாக்குப் பகுதி அருகே சென்றுகொண்டு இருந்தது. அப்போது பேருந்தின் முன்பக்கச் சக்கரத்தில் கரும்புகையுடன் தீ எரிய தொடங்கியது.
இதனைச் சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் பேருந்தில் இருந்து பயணிகளை வேகமாக வெளியேற்றினார். பின்னர் தண்ணீரை ஊற்றித் தீயை அணைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர், மாற்று பேருந்து மூலம் பயணிகளை அனுப்பி வைத்தனர்.