டெல்லியில் அதிகாலையில் பிரபல ரவுடி கும்பலை சேர்ந்த இருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
டெல்லியில் ஜிதேந்தர் மன் கோகி என்ற ரவுடி கும்பலுக்கும், டெல்லு தாஜ்புரியா கும்பலுக்கும் இடையே தீராத பகை உள்ளது.
இதனால் இரு கும்பலை சேர்ந்தவர்களும் அவ்வப்போது பொது இடங்களில் துப்பாக்கியால் சுட்டுக் கொள்வது வழக்கம்.
இந்நிலையில் ரோகிணி காவல்துறை சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் ஜிதேந்தர் மன் கோகி கும்பலலைச் சேர்ந்தவர்கள் பதுங்கி இருப்பதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்ற போது ரவுடி கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியது. போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.
ஆயுதங்களுடன் 3 பேரை கைது செய்த போலீசார்த் தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.