செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வளர்ச்சி திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் எனத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை ஐஐடி வளாகத்தில் 2 நாட்கள் நடைபெற உள்ள தக்சின் பதா மாநாட்டின் தொடக்க விழா நிகழ்வு நடைபெற்றது.
இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஐஐடி இயக்குனர் காமகோடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது தேச மறுமலர்ச்சிக்கான தொழில்முனைவு மற்றும் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் அவர்கள் விவாதித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை ஒவ்வொரு ஆண்டும் வன்முறையால் 6 ஆயிரம் பேர் வரை இறந்தார்கள் எனக் கூறிய ஆர்.என்.ரவி, மோடி ஆட்சியில் வன்முறை இல்லை எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆபரேசன் சிந்தூர் போன்ற நடவடிக்கைகளை முன்பு இருந்த தலைவர்களால் செய்திருக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
மேலும், சுதந்திரத்திற்குப் பிறகும் பிரிட்டிஷ்காரர்களின் கல்விமுறையை பின்பற்றியது வேதனைக்குரிய விஷயம் எனவும் அவர் கூறினார்.