H1-B விசாவின் கட்டண உயர்வு இன்று முதல் அமலாவதால் அமெரிக்கா செல்வதற்கான விமான கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன.
அமெரிக்காவில் எச்-1பி விசாக்களுக்கான வருடாந்திர விண்ணப்பக் கட்டணம் ஒரு லட்சம் டாலராக உயர்த்தப்பட்டது. இதனையடுத்து வெளிநாடுகளில் உள்ள ஊழியர்கள் உடனடியாக அமெரிக்கா திரும்புமாறு மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் அறிவுறுத்தியள்ளன.
விசா கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், உடனடியாக அமெரிக்கா செல்ல ஊழியர்கள் முயன்று வருகின்றனர். இதனால் அமெரிக்கா செல்லும் விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது.