தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 500 பேர் பாஜகவில் இணைந்தனர்,
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சிங்காநல்லூரில் நடைபெற்ற மாபெரும் இணைப்பு விழாவில் திமுக நிர்வாகிகள், மற்றும் கிராம பொதுமக்கள் 500 பேர், திமுகவின் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரும் திமுகவின் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளருமான திரு.ரமேஷ் அவர்களின் தலைமையில், பாஜகவில் இணைந்ததாக தெரிவித்துள்ளார்.
அவருடன், சிங்கநல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர். திருமதி. வசந்தி, சிங்கநல்லூர் ஊராட்சி மன்ற துணை தலைவர், திரு.பழனிச்சாமி, ஒன்றிய துணை செயலாளர் திரு. ரத்தினம், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், திரு.கன்னிமுத்து, திமுக கிளைச் செயலாளர்கள் திரு.காளிமுத்து, திரு. சந்தோஷ், திரு. கணேஷ் குமார், தங்கமணி ஆகியோரும் பாஜகவில் இணைந்ததாக கூறியுள்ளார்.
இந்த நிகழ்வு முடிந்த பிறகு, ரமேஷ் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்ப உறுப்பினர்களை சந்தித்து பேசினேன். அப்போது அவரது வீட்டில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உருவப்படம் வைக்கப்பட்டது. நமது பாஜகவில் புதிதாக இணைந்த பலரது வீட்டிலும், பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் உருவப்படம் இடம்பெற்று இருப்பது, நமது பாஜகவின் மீதும் பாரத பிரதமரின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.