சூரத் – பிலிமோரா இடையேயான முதற்கட்ட புல்லட் ரயில் சேவை 2027ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மும்பையில் இருந்து குஜராத்தின் அகமதாபாத் வரையிலான நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவையை தொடங்குவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய இந்த ரயில் சேவை ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகம் மற்றும் ஷில்பாட்டா இடையில் 21 கிலோ மீட்டர் துாரம் சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணியை, அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிவேகமாக செல்லக்கூடிய புல்லட் ரயில் சேவை 2027 டிசம்பரில் தொடங்கும் எனத் தெரிவித்தார்.