தவெக தலைவர் விஜய் பொது இடங்களில் மற்ற கட்சி தலைவர்களை தன்னுடன் ஒப்பிட்டு பேசுவது சரியானதல்ல என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், கணபதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ் தலைவர், பிரதமரை ஒப்பிட்டு விஜய் பேசியது முறையல்ல என தெரிவித்தார்.
மற்ற கட்சி தலைவர்களை விஜய் தன்னுடன் ஒப்பிடுவது சரியான நடைமுறை அல்ல என்றும் அவர் கூறினார். மேலும் விஜய் செல்லும் இடங்களில் மின்தடை உள்ளிட்ட இடையூறு ஏற்படுத்துவது ஏற்புடையதல்ல எனறும் அவர் தெரிவித்தார்.
திமுக, காங்., ஆட்சியில் மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்டதாகவும், ஆனால் “தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவரை கூட மீட்டு கொண்டு வந்தவர் பிரதமர் மோடி என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.