சென்னை ஓஎம்ஆர் பகுதியில் சேவா பாரதி தமிழ்நாடு அமைப்பு சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை ஓஎம்ஆர் பகுதியில் சேவா பாரதி தமிழ்நாடு அமைப்பு சார்பில் ‘Run2Rise’ என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. பெண் குழந்தைகளின் கல்விக்கு நிதி திரட்டும் நோக்கில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
3, 5, 10 கிலோ மீட்டர் என 3 பிரிவுகளாக நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய கடற்படை ரியர் அட்மிரல் சதீஷ் ஷெனாய் பரிசுகளை வழங்கி கவுரவப்படுத்தினார். மாரத்தானில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக போட்டியாளர்கள் தெரிவித்தனர்.