ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மரியாதை செலுத்தினார்.
பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி, பசும்பொன்னுக்கு வந்த சுதாகர் ரெட்டியை பாஜக மகளிர் அணியினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர், முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து பேசிய அவர், பசும்பொன்னில் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.