புதுச்சேரியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி நாட்டில் உள்ள 75 நகரங்களில் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, புதுச்சேரி கடற்கரை பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற நமோ யுவ ரன் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை மாநில தலைவர் ராமலிங்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உடற்பயிற்சியை வலியுறுத்தி 5.5 கிலோ மீட்டம் தூரத்திற்கு நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். மாரத்தான் போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.