பயங்கரவாதத்துக்கு எதிராக வியூகம் : மீண்டும் துளிர்க்கும் இந்தியா- கனடா உறவு!
Jul 24, 2026, 08:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பயங்கரவாதத்துக்கு எதிராக வியூகம் : மீண்டும் துளிர்க்கும் இந்தியா- கனடா உறவு!

Murugesan M by Murugesan M
Sep 21, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கனடாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு ஆலோசகர் நத்தலி ட்ரூயின், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன் மூலம் இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் உறவு வலுப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா- கனடா உறவு சுமுகமாக இல்லாமல் இருந்தது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் படுகொலைச் செய்யப்பட்டார். இந்தப் படுகொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரித்த இந்தியா, அவற்றை முட்டாள்தனமானவை என்றும், உள்நோக்கம் கொண்டவை என்றும் தெரிவித்திருந்தது. இந்தியாவில் தேசத் துரோக குற்றங்களுக்காகத் தேடப்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்குக் கனடா புகலிடம் அளிப்பதாக இந்தியா ஆதாரப்பூர்வமாகக் குற்றம் சாட்டியது.

காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கோ, அவர்களைக் கைது செய்து, இந்தியாவுக்கு அழைத்து வந்து வழக்கு நடத்துவதற்குக் கனடா அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் இந்தியா கூறிவந்தது.

இதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றின. இந்தியா கனடாவுக்கு அளித்து வந்த விசா சேவையை நிறுத்தி வைத்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மிகவும் மோசமான நிலையை எட்டியது.

இந்நிலையில் உட்கட்சி அழுத்தம் காரணமாக லிபரல் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோவின் 9 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய கனடா பிரதமர் மார்க் கார்னி இருநாடுகளுக்கும் இடையேயான நீண்டகால உறவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.தொடர்ந்து,கனடாவில் நடந்த G7 உச்சிமாநாட்டின் போதும் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மீண்டும் இரு நாடுகளும் தங்களது தூதர்களை நியமித்தன.

இந்நிலையில், கடந்த 18 ஆம் தேதி டெல்லி வந்திருந்த கனடாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு ஆலோசகர் ( Nathalie Drouin ) நத்தலி ட்ரூயின்,இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இருநாட்டுத் தலைவர்களும் முன்னெடுத்த இருதரப்பு உறவுகளை மீட்டெடுக்கவும் இருவரும் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயங்கரவாத எதிர்ப்பு, நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுதல் மற்றும் உளவுத்துறை பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும், எதிர்கால ஒத்துழைப்புக்கான முன்னுரிமைகள் பற்றியும் இரு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் விவாதித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

Tags: பயங்கரவாதத்துக்கு எதிராக வியூகம்IndiaCanadaStrategy against terrorism: India-Canada relations to flourish againஇந்தியா- கனடா உறவு
ShareTweetSendShare
Previous Post

நவராத்திரி பண்டிகை – அயோத்தியில் களைகட்டிய அலங்கார பொருட்கள் விற்பனை!

Next Post

பிரதமர் மோடி பிறந்த நாள் – புதுச்சேரியில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி!

Related News

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் – ரயில்வே அமைச்சகம்

ஜனநாயக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் DEEP STATE : டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் யார்? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

இன்றைய தங்கம் விலை!

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகள் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!

சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்ப முயற்சி – டெல்லி காவல்துறை எச்சரிக்கை!

நீண்ட தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ‘குஷா’ ஏவுகணை – முதற்கட்ட சோதனை வெற்றி!

ஜந்தர் மந்தரில் குழப்பம்; சீக்கியர்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இடையே கைகலப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies