ஹரியானா மாநிலம் ஹிசாரில் முதல் விமான சாகச கண்காட்சியை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
இந்திய விமானப்படையின் சூர்யா கிரண் ஏரோபாட்டிக் குழு, ஹிசாரில் உள்ள மகாராஜா அக்ரசென் விமான நிலைய வளாகத்தில், இந்த விமான சாகச கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது.
ஹரியானாவின் முதல் விமான கண்காட்சியில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விமான சாகச கண்காட்சியில் இந்திய விமான படையின் விமானங்கள் வானில் நிகழ்த்திய பல்வேறு சாகங்களை பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.