ரசிகர்களை முறைப்படுத்த தவறினால் விஜய்யின் அரசியல் பயணத்தில் எந்தப் பலனும் இருக்காது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மீனவர் பிரச்னை விவகாரத்தில் உண்மை நிலவரத்தை புரிந்து கொண்டு விஜய் விமர்சிக்க வேண்டும் என தெரிவித்தார்.
பாஜக நடத்தும் மக்கள் நலத் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி கொடுப்பது இல்லை என்றும் அவர் கூறினார். திர்க்கட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்காமல் இருப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் எனறும் அவர் குறிப்பிட்டார்.
“திமுகவிற்கு எதிரானவர்கள் NDA கூட்டணியில் இணைய வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணம் என்றும் வானதி தெரிவித்தார்.