தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள “இட்லி கடை” திரைப்படத்தில் அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ரசிகர்கள் முன்னிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்ப் பார்த்திபன், சத்யராஜ் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நடிகர்த் தனுஷ் பேசிக் கொண்டிருந்தபோது, அவருடன் புகைப்படம் எடுக்க ரசிகர் ஒருவர், மேடைக்கு வந்தார். அப்போது அங்கிருந்த பவுன்சர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் நடிகர் தனுஷ், அந்த ரசகிரை மேடைக்கு அழைத்து, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அவரை தொடர்ந்து பேசிய நடிகர் பார்த்திபன், நடிகர்கள் வாழ்க்கையில் கொஞ்ச நாள் தான் உச்சத்தில் இருப்பதாகவும், ஆனால் நடிகர் சத்யராஜ் வாழ்நாள் முழுவதும் மிகப்பெரிய ஸ்டாராகத்தான் இருப்பார் என்றும் தெரிவித்தார்.
மேலும், விஜயம் யார் வேணாலும் செய்யலாம், ஆனால் ஜெயம் உங்கள் கையில்தான் உள்ளது என்று கூறிய அவர், 2026இல் நான் தான் சிஎம் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சத்யராஜ், கொங்கு தமிழில் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தனுஷுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை தற்போது நிறைவேறி விட்டதாகக் கூறினார். மேலும், நடிகர் பார்த்திபனையும் கிண்டலடித்தார்.