7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் நடப்பாண்டு 632 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வறிக்கையில்,நீட் தேர்வு வருவதற்கு முன்பு தமிழகத்தில் ஆண்டுதோறும் 40க்கும் குறைவான அரசு பள்ளி மாணவர்களே மருத்துவப் படிப்பில் சேர்ந்து வந்ததது தெரியவந்துள்ளது.
கடந்த அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் 632 மருத்துவம் வாய்ப்பு கிடைத்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் மூலம் 6வது ஆண்டாக ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு நனவாகி வருவதும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.