மறைந்த பாடகர் ஜுபின் கார்க்கின் தீவிர ரசிகை ஒருவர், அவரது உடலை பார்த்து கதறி அழுதார்.
அசாமை சேர்ந்த பிரபல பாடகர் ஜுபின் கார்க், சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் செய்த போது நிகழ்ந்த விபத்தில் கடலில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில், இந்த அசம்பாவிதச் சம்பவம் நிகழ்ந்தது.
இது அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி, அவரது எண்ணற்ற ரசிகர்கள் மனதில் இடியாய் இறங்கியது. இந்நிலையில், ஜுபின் கார்க்கின் உடல் குவகாத்தியில் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
அப்போது அவரது ரசிகர்களில் ஒருவராக வந்த பெண் ஒருவர், ஜுபின் கார்க்கின் இறந்த உடலை பார்த்து கதறி அழுதார். இது அங்கிருந்த மக்களை மேலும் சோகமாக்கியது.