சென்னை தாம்பரத்தில் அண்மையில் கட்டி முடிக்கப்பட்ட மழைநீர் கால்வாய் தரமற்ற முறையில் இருந்ததால் ஒரு மழைக்கே தாங்காமல் இடிந்து விழுந்து சேதமாகிவிட்டது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை தாம்பரத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் மழை நீர் கால்வாய் கட்டப்பட்டது. அண்மையில் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்ட இந்த மழைநீர் கால்வாய் தரமற்ற முறையில் இருப்பதாகத் தொடக்கம் முதலே அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் சுதர்சன் நகரில் அமைக்கப்பட்டிருந்த மழைநீர் கால்வாய் இடிந்து விழுந்து சேதமானது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் புதிதாகத் திறக்கப்பட்ட மழைநீர் கால்வாய் ஒரு மழைக்குக் கூட தாங்காமல் இடிந்து விழுந்துவிட்டதாகத் தெரிவித்ததோடு.
ஆளும் கட்சியினருக்கு லஞ்சம் வழங்கிய ஒப்பந்ததாரர்கள் கால்வாய் அமைக்கும் பணியை முறையாக மேற்கொள்ளவில்லை எனவும் அப்பகுதியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.