மூணாறு பகுதியில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஓட்டிச் சென்ற ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி ரிலீசான திரைப்படம் கூலி.
இதில் ஜோஜு ஜார்ஜும் நடித்திருந்தார். இந்த நிலையில், மூணாறு பகுதியில் படப்பிடிப்பின்போது நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஓட்டிச் சென்ற ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அவருடன் சென்ற ஆறு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.