ரஷ்யாவின் Bion-M No.2 உயிரியல் விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 75 எலிகளில், 10 எலிகள் உயிரிழந்தன.
கடந்த மாதம் ரஷ்யாவின் Bion-M No.2 உயிரியல் விண்கலம் மூலம் விண்வெளிக்கு 75 எலிகள் அனுப்பி வைக்கப்பட்டன.இந்த விண்கலத்தில் எலிகள் மட்டுமின்றிப் பழ ஈக்கள், தாவர விதைகள், நுண்ணுயிரிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட உயிரினங்கள் பயணித்தன.
விண்வெளி பயணத்தின்போது வீரர்களுக்கு ஏற்படும் உயிரியல் தாக்கங்கள் குறித்த துல்லியமான தகவல்களைப் பெறும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், 30 நாட்கள் சுற்றுப்பாதையில் இருந்த எலிகளில், 65 எலிகள் வெற்றிகரமாகப் பூமிக்கு திரும்பின. 10 எலிகள் உயிரிழந்தன.
இதையடுத்து எலிகள் உயிரிழந்தற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.