தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கடைக்குள் புகுந்து அரசு பேருந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி அரசு விரைவு பேருந்து சென்று கொண்டிருந்தது.
எட்டயபுரம் அடுத்த M.கோட்டூர் விலக்கு பகுதியில் பயணித்த போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணிகள் நல்வாய்ப்பாகக் காயமின்றி உயிர்தப்பினர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.