அமெரிக்காவில் படிப்பதற்கு இந்திய மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்காக வெளிநாட்டினர் மீது வன்மத்தைக் கக்கி வருகிறார் அதிபர் டிரம்ப்.
அவர் விதித்த பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் மற்றும் அரசியல் நிலவரங்களால் அமெரிக்காவில் கல்வி பயிலவே வெளிநாட்டு மாணவர்கள் அச்சப்படும் நிலை உள்ளது.
ஆய்வுகளின்படி, 2023-24 ஆம் ஆண்டில் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் இந்தியாவைச் சேர்ந்த 3 லட்சத்து 31 ஆயிரத்து 602 மாணவர்கள் சேர்ந்தனர்.
இது அனைத்துச் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் 29 சதவீதமாகும்.
அதன்படி கடந்த ஓராண்டில் அமெரிக்காவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 46 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது.
அதேபோல் கனடா மீதான ஆர்வமும் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 75 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் அரசியல் சூல்நிலைகளால் இந்த எண்ணிக்கைத் தற்போது சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.