மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவுமே செய்வதில்லை என போலியாக புலம்பும் சிலர் உண்மையை உணர்ந்து திருந்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த இரு கப்பல் கட்டும் தளங்கள் அமைப்பதற்காக 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள் முன்வந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடிக்கு வருகை தந்து விமான நிலையத்தை புதுப்பித்து 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடித்தளமிட்டதை குறிப்பிட்ட அவர், இரு மாதங்களுக்குள்ளேயே 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மேலும் முதலீடு செய்ய முன்வந்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவுமே செய்வதில்லை என பொழுது புலர்ந்ததும் போலியாக புலம்பும் சிலர் உண்மையை உணர்ந்து திருந்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.