அமெரிக்கா சென்றுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அந்நாட்டின் வர்த்தக பிரதிநிதியை சந்தித்துப் பேசினார்.
அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை தொடர, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது குழுவினருடன் நேற்று அமெரிக்கா சென்றார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தும் முயற்சியாக நியூயார்க்கில் அந்நாட்டின் வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீரை (Jamieson Greer), மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட உதவுமென இருதரப்பிலும் நம்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.