ஹெச்-1பி விசாவுக்கான கட்டண உயர்விலிருந்து மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஹெச்-1பி விசா கட்டணத்தை ஒன்றரை லட்சம் ரூபாயில் இருந்து 88 லட்சம் ரூபாயாக உயர்த்தும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டார்.
இது அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் இந்தியர்களுக்குப் பேரிடியாக விழுந்தது. அதைத்தொடர்ந்து ஏற்கனவே ஹெச்-1பி விசா வைத்திருப்போர் அல்லது புதுப்பிப்பவர்களுக்கு இந்தக் கட்டண உயர்வு பொருந்தாது எனவும் இது ஒருமுறை மட்டுமே செலுத்தும் கட்டணம் எனவும் அமெரிக்க அரசு விளக்கமளித்தது.
இந்த நிலையில், அமெரிக்காவிற்கு வரும் மருத்துவர்களுக்கு ஹெச்1-பி விசா கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாகப் பேசிய வெள்ளை மாளிகைச் செய்தி தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ், அதிபர் டிரம்ப்பின் விசா கட்டண உயர்வில் சில விலக்குகள் அளிக்கப்படவுள்ளதாகவும், குறிப்பாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அதில் அடங்குவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.