நாசாவில் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கான பணிகளுக்காக எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில் இருந்து வெறும் 10 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் வேலை வாங்குவது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் என ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் முதுகலைப் பட்டம், பணி அனுபவம் அல்லது ஆயிரம் மணி நேரம் வரை விமானங்களில் பயணம் செய்த அனுபவங்கள் எனத் தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாசாவில் வேலைப் பார்க்க உடற் தகுதிகளும் கட்டாயம் ஆகும். விண்ணப்பிக்கும் நபர் 5.2 முதல் 6.3 அடி வரை உயரம் இருக்க வேண்டும். சாதாரணமாக இரத்த அழுத்தம் 140/90 ஆக இருக்க வேண்டும்.
அடுத்ததாக, விண்ணப்பதாரர்கள் தங்கள் உடல் தகுதியினை நிரூபிக்க ஒரு கடினமான பொறுமைச் சோதனை வைக்கப்படும்.
இவ்வாறு பல சோதனைகளைக் கடந்து அண்மையில் நடைபெற்ற புதிய விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்த 8,000 விண்ணப்பதாரர்களில், ஆறு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் என மொத்தம் 10 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.