அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் வீட்டில் புகுந்த முதலையை வனத்துறையினர் பல மணி நேரம் போராடி பிடித்தனர்.
ஃபுளோரிடாவின் Fort Myers ( ஃபோர்ட் மியர்ஸ்) பகுதியில் உள்ள வீடு ஒன்றின் பின்புறம் உரிமையாளர் வழக்கம் போல் நடந்து சென்றிருந்தார்.
அங்கு தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பல அடி உயரத்தில் முதலை ஒன்று ஆக்ரோஷமாக இருப்பதைக் கண்டு அவர் அச்சமடைந்தார்.
இதுகுறித்த தகவலின் பேரில் Fort Myers ( ஃபோர்ட் மியர்ஸ்) பகுதிக்குச் சென்ற வனத்துறையினர், பல அடி நீளமுள்ள முதலையை பிடிக்க முயன்றனர்.
ஆனால் தரையில் உருண்டு பிரண்டு போக்கு காட்டிய முதலையை பல மணி நேரம் போராடி பிடித்து வாயை டேப்பால் கட்டி வாகனத்தில் கொண்டு சென்றனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.