24 ஆண்டுகளாக ஒருநாள் கூட விடுமுறை எடுக்காமல் ஓய்வின்றி உழைக்கும் ஒரே தலைவர் பிரதமர் மோடி என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், புதிய ஜிஎஸ்டி விகிதங்களை அறிவித்தது பிரதமர் மோடியின் மிகப்பெரிய முடிவு எனத் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி வரி குறைப்பு வரி செலுத்துவோருக்கும் அரசாங்கத்திற்கும் இடையே நம்பிக்கையின் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா பயங்கரவாத தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளதாகவும், இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்த முயல்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்து பிரதமராக உயர்ந்த மோடியை உலகம் வியப்புடன் பார்க்கிறது என்றும், கடின உழைப்பு, தியாகம், கட்டுப்பாடு மற்றும் நிலையான முயற்சியே மோடியின் ஆளுமைக்குச் சான்று எனவும் கூறியுள்ளார்.
இந்தியாவின் கடந்த கால வெளியுறவுக் கொள்கை மந்தமானது மற்றும் திசையற்றது என விமர்சித்துள்ள அமித் ஷா, முதுகெலும்பு கொண்ட வெளியுறவுக் கொள்கையைப் பிரதமர் மோடி உருவாக்கியதாக நெகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும், பிரச்னைகளுக்கு எதிராகப் போராடுவது அனைவரின் இயல்பு என்றும், பிரச்னைகளில் முழுமையான வெற்றியை அடைவது பிரதமர் மோடியின் இயல்பு எனவும் அமித்ஷா பாராட்டினார்.