சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர்கள் ஷாருக்கானும், விக்ராந்த் மாஸியும் பெற்றனர்.
டெல்லியில் 71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஜவான் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை ஷாருக்கான் பெற்றுக்கொண்டார்.
இதேபோல் இயக்குநர் விது வினோத் சோப்ரா இயக்கத்தில் உருவான ‘12th ஃபெயில்’ படத்திற்காக, சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் விக்ராந்த் மாஸி பெற்றார்.
திருமதி சாட்டர்ஜி வெர்சஸ் நார்வே படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ராணி முகர்ஜி சிறந்த நடிகை விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் பெற்றார்.