7 போர்களை நிறுத்திய தனக்கு உக்ரைன் – ரஷ்யா போரின் நிலைமை ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொது சபையின் 80வது கூட்டம் நடைபெற்றது. இதில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் கலந்து கொண்டார். இதனைதொடர்ந்து இருவரும் ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக பேசிய அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இரு போர்களை நிறுத்த தனக்கு உதவியதாகவும், 7 போர்களை நிறுத்திய தனக்கு உக்ரைன் – ரஷ்யா போரின் நிலைமை ஏமாற்றம் அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
ரஷ்ய அதிபர் புதினுடனான தனது உறவின் காரணமாக போர் நிறுத்தம் எளிதான ஒன்றாக இருக்கும் என்று நினைத்ததாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.