மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றையாவது முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்று பேசி இருக்கிறாரா என்றும், ஜிஎஸ்டி வரி குறைப்பால் தமிழக அரசுக்கு பாதிப்பு இல்லை எனவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி விகிதங்களை 2 அடுக்குகளாக மத்திய அரசு குறைத்துள்ளதாக தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூ.6,000 ரொக்கத்தை மத்திய அரசு வழங்குகிறது என்றும், ஊக்கத் தொகையை பெற விடாமல் தமிழக அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்வதாகவும் அவர் கூறினார்.
மத்திய அரசுக்கு நற்பெயர் கிடைக்கக்கூடாது என்பதற்காக விவசாயிகளுக்கான திட்டங்களை தமிழக அரசு குறைக்கிறது என்றும் அவர் கூறினார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவியை அண்ணாமலை நட்பு ரீதியாக சந்தித்துள்ளார் என்றும், பீகார் மாநிலத்தில் எப்படி போலி வாக்காளர்கள் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளதோ அதேபோன்று கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுகவினர் போலி வாக்காளர்களை அதிகமாக சேர்த்துள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.