திருச்செந்தூரில் பட்டாகத்தி, வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞர்களை போலீசார் துரத்தி பிடித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் – திருநெல்வேலி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே 4 இளைஞர்கள் பட்டாகத்தி, வாளுடன் சுற்றித்திரிந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு காவல்துறையினர் சென்ற நிலையில் அங்கு நின்றிருந்த இளைஞர்கள் சிதறி ஓடினர்.
இதையடுத்து அவர்களை துரத்திச் சென்ற போலீசார் பொதுமக்கள் உதவியுடன் ஒருவரை மட்டும் பிடித்தனர். தொடர்ந்து இளைஞர்கள் கூலிப்படையா? கொலை திட்டம் திட்டியுள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பட்டாக்கத்தி, வாளுடன் சுற்றித்திரிந்த 4 இளைஞர்களை போலீசார் துரத்திச் சென்ற வீடியோ காட்சி வெளியாகி உள்ளது .